Skip to main content

திமுகவின் போலி "சமூகநீதி"!* . பாகம் 2

tnbjp.com
*திமுகவின் போலி "சமூகநீதி"!* .

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா வின் தர்கொலை நிகழ்வும், இதனை வைத்து திமுக நாடகமாடியதையும் நாம் அறிவோம்.

அ.இ.அ.தி.மு.க வின் வலுவிழந்த ஆட்சியும், தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாஜக வின் எழுச்சியும் உணர்ந்த திமுக, எதிர் வரும் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விடுமோ என்ற அச்சத்தில் எப்படி எல்லாம் மத்திய அரசினை  எதிர்க்க முடியுமோ அவ்வாரல்லம் எதிர்த்து வருகின்றனர். தர்போதுள்ள அதிமுக ஆட்சி, பாஜக வின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சூழலில் தான் குழந்தை அனிதாவின் மரணம் நடைபெற்றது.

டெல்லி வரை அழைத்து சென்று வழக்கு போடவைத்தவர்கள் அக்குழந்தையை அடுத்தக்கட்டத்திற்கு படிக்க ஏற்பாடு செய்ய தவறி விட்டு அக்குழந்தையின் மரணத்தை வைத்து தங்களின் அரசியலின்  அடுத்தகட்ட பறிணாமத்திற்கு  பயன்படுத்தி கொண்டார்கள். அதற்கு துணையாக திருமாவளவனையும் அணி சேர்த்து கொண்டார்கள்.

குழந்தை அனிதாவின் மரணம் "சமூகநீதிக்கு எதிரான யுத்தமாக சித்தறித்தார்கள். கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் திமுக ஆட்சிகாலத்தில்தான் சமூகநீதிக்கு எதிரான கொடுமைகள் அறங்கேரிய காலக்கட்டம்.

அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் இவர்கள் காலத்தில்தான் தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு படுகொலை நடைபெற்றது. மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் தேர்வு செய்யப்பட்ட பின்பு தனக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி முதல்வர் கலைஞரை சந்தித்து பாதுகாப்பு கேட்டார். பாதுகாப்பு வழங்காமல் விட்டதால்தான். 30.6.1997 மாலை முருகேசன் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது எங்கே போனது உங்கள் "சமூகநீதி"?.

முருகேசனை கொலை செய்த கும்பல்தான் கோயில் நிலத்தை குத்தகை எடுத்ததற்காக 5.7.1992 ல் சென்னகரம் பட்டியில் அம்மாசி, வேலு என்ற இருவரையும் கொலை செய்தவர்கள். இக் கொலை காரர்களை கைது செய்யாத திமுக அரசை கண்டித்து இன்று திமுக வோடு கைகோர்திருக்கும் திருமா அன்று மிகப்பெரிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகளின்சார்பில் எடுத்துள்ளார்.

பாஜக வை வேரூன்ற விடமாட்டோம் என்று கொக்கரிக்கும் கும்பல்களே! இன்று "சமூகநீதி" என ஓலமிடுகின்றீகள். அன்று மேலவளவு படுகொலைக்கு தலித் மக்களின் மிகப்பெரிய போராட்டம், பஸ் எரிப்பு,  சிறை என பல சம்பவங்களிர்கு பிறகே!  சாதி வெறியர்களை திமுக போலிஸ் கைது செய்தது. அன்று திமுக வின் சமூகநீதி எங்கே போனது?.

தலித் மக்களின் பாதுகாவலனாக இனி பாஜக துணைநிற்கும். உண்மையான சமூகநீதி பாதுகாக்கப்படும். ஒப்பாரி ஓலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பொய்யர்களின் புளுகை தகர்த்தெறிந்து தங்களுக்கான பாதுகாவலனாக பாஜக வை ஏற்று தலித்துகள் அணிதிரளவோண்டிய காலம் கணிந்து விட்டது. அணிதிரள்வோம்.

எங்களில் எவரும் தாழ்ந்தவர் இல்லை!

எங்களை விட எவரும் உயர்ந்தவர் இல்லை!

வாழ்க பாரதம்!

இத்துடன் மேலவளவு தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
 *தடா.பெரியசாமி*

Comments

Popular posts from this blog

Tada Periyasamy Profile

PERSONAL DETAILS Name                      :              D.PERIYASAMY Father name            :                  P.Duraisamy Date of Birth : 05/09/1962 Nationality : Indian Religion / Caste        : Hindu Address : Karan ini illam                                                    Nova nagar, Thirumandurai (op)                                                    Kunnam (TK)                                           ...

Tada Periyasamy images

 Tada Periyasamy images and Photos Tada Periyasamy BJP National general council member

Tada Periyasamy images 3

 Tada Periyasamy images 2